Tamil Flash News
கவசமில்லாமல் காட்சி தந்த ஆதிபுரீஸ்வரரை காண அலைமோதிய மக்கள் கூட்டம்
சென்னை திருவொற்றியூரில் உள்ளது தியாகராஜ சுவாமிகள் உடனுறை வடிவுடையம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் எப்போதும் கூட்டத்துக்கு பஞ்சம் இருக்காது.
பட்டினத்தாரின் ஜீவசமாதி இக்கோவிலின் அருகில்தான் உள்ளது. இவ்வளவு பிரசித்தி பெற்ற இக்கோவிலில் உள்ள ஆதிபுரீஸ்வரர் வருடம் முழுவதும் கவசத்துடனேயே இருப்பார்.
வருடத்திற்கு ஒரு முறை கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியில் கவசம் நீக்கப்பட்டு காட்சி தருவார். நேற்று இவரை பார்க்க பெரும் திரளானோர் திரண்டனர்.
ஸ்வாமிக்கு அனைத்து அபிசேகங்களும் நடைபெற்றது. இவ்விழாவில் தலைமை செயலாளர் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்பு அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
