குஞ்சாக்கோ கோபன் நடித்த படத்தில் அதர்வா நடிக்கிறாரா

40

நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா . பாணா காத்தாடி மூலம் அறிமுகமான இவர் பல அதிரடி படங்களில் நடித்து இன்றும் முன்னணி கதாநாயகனாக உள்ளார். இவர் குஞ்சாகோ கோபன் நடித்த படத்தில் இவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இவர் கைவசம் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ் போன்ற படங்கள் உள்ளன. இதில் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில், நடிகர் அதர்வா நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மலையாளத்தில் மிதுன் இயக்கத்தில் குஞ்சக்கோ போபன் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘அஞ்சாம் பாத்திரா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் அதர்வா ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாருங்க:  தமிழ் சினிமா இயக்குனருக்கு பிடிக்காத கர்ணன்
Previous articleஹன்சிகாவின் மஹா டீசர் தேதி அறிவிப்பு
Next articleஒரு காலத்தில் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தினேன் – ராஜேந்திர பாலாஜி வருத்தம்