Published
3 years agoon
By
Vinoஅடங்கமறு படத்தின் மூலம் நம்பிக்கை அளித்த இயக்குனரான கார்த்திக் தங்கவேல் இயக்கும் அடுத்தப் படத்தில் நடிகர் விஷால் நடிக்கவுள்ளார்.
நடிகர் கார்த்தி இப்போது சுல்தான் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அடங்கமறு படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு அதிக நாட்களை எடுத்துக் கொண்டுள்ளதால் இப்போதைக்கு அந்த படத்தை தொடங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் விஷாலிடம் கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளார் அடங்கமறு இயக்குனர்.
நடிகர் விஷால் இப்போது சக்ரா மற்றும் துப்பறிவாளன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக இரு படங்களின் படப்பிடிப்புப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இருமுகன், நோட்டா ஆகிய படங்களின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படங்களை முடித்ததும் கார்த்தி இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தனுஷின் முனனாள் மேனேஜர் வினோத்குமார் தயாரிக்கிறார்.
ஹீரோவாக களமிறங்கும் கோமாளி இயக்குனர்
செய்தி ஊடகம் மீது கோபமான இயக்குனர் நவீன்
இயக்குனர் கார்த்திக் ரகுநாத் ஒரு பார்வை- ப்ளாஷ்பேக்
நண்பரின் திடீர் மறைவு-சுசீந்திரன் வருத்தம்
சுறாவின் தோல்விக்கு யார் காரணம்! 10 ஆண்டுகளுக்கு பின்னர் மனம்திறந்த இயக்குனர்!
விஷால் சிறந்த நடிகர்…. கேமராக்குப் பின்னால் – பிரபல இயக்குனர் கலாய் !