ஜோதிகாவின் பேச்சை டிவிஸ்ட் பண்ணுகிறார்கள் –சக நடிகை ஆதங்கம்!

ஜோதிகாவின் பேச்சை டிவிஸ்ட் பண்ணுகிறார்கள் –சக நடிகை ஆதங்கம்!

தஞ்சை பெரியகோவில் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகை ஜோதிகாவுக்கு ஆதரவாக நடிகை வரலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஜோதிகா மக்கள் கோவில்களைக் காட்டிலும் பள்ளி கல்லூரிகளுக்கு அதிக கவனம் செலுத்தாதது குறித்து பேசியிருந்தார். அவரது பேச்சில் ‘நான் படப்ப்டிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்தபோது பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்றேன். அந்த கோவில் பெரும் பொருட் செலவில் பராமரிக்கப்படுகிறது. ஆனால் அருகில் இருந்த மருத்துவமனை பராமரிப்பின்றி மோசமாக இருப்பது வருத்தமளிக்கிறது. மக்கள் கோவில்களுக்கு ஏராளமான செலவுகளை செய்வதை காட்டிலும் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு செலவு செய்ய வேண்டும்’ என கூறினார்.

அதற்கு மதவாதிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தாலும் சினிமா துறையினராலும், பொதுமக்களாலும் பாராட்டப்பட்டது. மேலும் ஜோதிகாவுக்கு ஆதரவாக அவரது கணவர் சூர்யா அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்தபடியே பிரபல இணையத்தள சேனல் ஒன்று நடிகை வரலக்ஷ்மியிடன் வீடியோ காலில் பேட்டி எடுத்தது அப்போது ஜோதிகாவின் தஞ்சை கோவில் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய ஆங்கருக்கு பதிலளித்த வரலக்ஷ்மி ” ஜோதிகா, ஒரு மதம் சார்ந்த இடத்தை நன்றாக பராமரிக்கும் போது, உயிர்காக்கின்ற மருத்துவமனையை ஏன் கேர்லெஸ் ஆக விடுகிறோம் என கேட்டிருந்தார். ஆனால், அதை தெளிவாக புரிந்துகொள்ளாதவர்கள் ட்விஸ்ட் பண்ணி வேற மாதிரி கொண்டு சென்று பிரச்னையை கிளறி விடுகின்றனர்.. அது ஏன் என்று  எனக்கு புரியவில்லை. என கூறி ஜோதிகாவின் கருத்திற்கு ஆதரவளித்து பேசினார்.