பிரபல நடிகையும், நடிகர் பிரசன்னாவின் மனைவியுமான சினேகா தற்போது மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என அழைக்கப்பட்டவர் நடிகை சினேகா. கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். இவருக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதையடுத்து கடந்த 2012ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் 2015ம் வருடம் அவருக்கு மகன் பிறந்தான். அவனுக்கு விஹான் என பெயர் வைத்தனர்.
திருமணத்திற்கு பின் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சில திரைப்படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வந்தார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அவர் மீண்டும் கர்ப்பமடைந்தார். தற்போது அவருக்கு 7 மாதம் ஆகியுள்ள நிலையில் நேற்று அவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. முக்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.