நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் தனக்கு புகையிலை வாசம் மிகவும் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பிரபலங்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தென் பாண்டி சீமையிலே பாடலை இசைத்துப் பாடினார். ஆனால் அந்த பாடல் ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானது.
இதையடுத்து இப்போது மீண்டும் சமூகவலைதளத்தில் ஒரு பரபரப்பான கருத்தைத் தெரிவித்துள்ளாஅர். தனக்கு புகையிலை வாசம் மிகவும் பிடிக்கும் எனவும், ஆனால் புகைக்க அல்லாமல் வெறுமனே முகர்ந்து பார்க்க மட்டுமே என்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், ரோஸ், சாக்லேட், கேதுரு மரத்தின் வாசம், பென்சில் துகள்கள், ரப்பர் மற்றும் வெண்ணிலா ஆகிய பொருட்களின் வாசனையும் தனக்கு பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.