Samantha - Aditi Rao
Samantha - Aditi Rao

சமந்தா, அதிதிராவ்வை பின்னுக்கு தள்ளிய நடிகை சாய் பல்லவி!! என்னவாயிருக்கும்??

பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமா துறையில் நுழைந்தவர் நடிகை சாய் பல்லவி.

sai pallavi
sai pallavi

இதனைத் தொடர்ந்து, இவர் தமிழில் மாரி 2, என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்திருந்தார். தமிழில் வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் போகவே தெலுங்கு பக்கம் திரும்பினார் சாய் பல்லவி.

தெலுங்கில், சாய் பல்லவி நடித்த ஃபிடா, மிடில் கிளாஸ் அபாய் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. இந்நிலையில், தெலுங்கில் ‘ஆர்.எக்ஸ் 100 RX100’ என்ற காதல் ரொமான்ஸ் கலந்த படத்தை இயக்கிய அஜய் பூபதி இயக்கயுள்ள புதிய படமான மகாசமுத்திரத்தில் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதுவும் ஏற்கனவே இந்த படத்தில் நடிக்க நடிகைகள் சமந்தா அக்கினேனி, அதிதி ராவ் ஹைடாரி கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் திடீரென்று இயக்குனர் சாய்பல்லவி தான் தன்னுடைய புதிய படத்திற்கான சாய்ஸ் ஆக தேர்வு செய்யப்பட்டதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

தற்போது சாய்பல்லவி நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த லவ் ஸ்டோரி படத்தின் வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.