தமிழ் சினிமாவில் காதலன்,பாட்ஷா, மேட்டுக்குடி, வில்லாதி வில்லன்,தாஜ்மஹால், ரகசிய போலீஸ் 115 உள்ளிட்ட பல படங்களில் ரஜினி, கார்த்திக், பிரபு, பிரபுதேவா என பலருக்கு ஜோடியாக நடித்து 90களில் கலக்கியவர்தான் நக்மா.
இவர் தற்போது நடிப்பதில்லை என்று சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இவருக்கு மாநிலங்களவை தேர்தலில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இவரின் பெயர் வரும் என அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு மாநிலங்களை தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கவலையடைந்துள்ளார்.
தனக்கு அந்த தகுதியில்லையா என டிவிட்டரில் நக்மா வினவியுள்ளார்.