பிக்பாஸ் வீட்டிற்கு சென்று தற்கொலைக்கு முயன்ற நடிகை மதுமிதாவின் புகைப்படம் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Actress madhumitha pic made shock bb fans – பிக்பாஸ் வீட்டில் பலருடன் மோதிக்கொண்டே இருந்த மதுமிதா திடீரெனெ நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். கையை அறுத்துக்கொண்டு அவர் தற்கொலைக்கு முயன்றதால் அவர் வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது. அவர் கையில் இருந்த கட்டும் அதை நிரூபித்தது.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டில் தமிழகம் பற்றி ஒருவரியில் நான் ஒரு கவிதை சொன்னேன். அதனை ஒளிபரப்ப முடியாது என பிக்பாஸ் தெரிவித்தார். இதைக்கேட்டு அங்கிருந்த 8 பேரும் என்னை கிண்டலடித்தனர். என்னை பார்த்து சிரித்தனர். அதனால் மனமுடைந்து நான் கையை அறுத்துக் கொண்டேன். அப்போதும் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தனர். சேரன் சாரும், கஸ்தூரியும் மட்டுமே எனக்கு ஆதரவாக இருந்தார்கள் என அவர் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில், அறுக்கப்பட்ட அவரின் கையின் புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகரும், கடந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் இருந்தவருமான டேனியல் இந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘இதற்காகத்தான் நான் மதுமிதாவுக்கு ஆதரவாக பேசினேன்’ என பதிவிட்டுள்ளார்.
Intha Oru vishyathukaga Than nan pesunathu @igtamil @behindwoods @gallatadotcom pic.twitter.com/XVudbJo0Yc
— Daniel Annie Pope (@Danielanniepope) September 10, 2019