மனு ஸ்ம்ருதியில் தவறு இருப்பதாக சொல்லி அதில் பெண்களை இழிவுபடுத்தி இருப்பதாக கூறி சமீபத்தில் திருமாவளவன் பேசிய பேச்சு சர்ச்சையானது. இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் தீவிர எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் நடிகை குஷ்புவும் திருமாவளவனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில் குஷ்பு இன்று சிதம்பரத்தில் திருமாவளவனுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இருந்தார். காலையில் சென்னையில் இருந்து கிளம்பிய அவரை முட்டுக்காடு அருகே போலீஸ் வழிமறித்து கைது செய்தது.
இதே பாஜகவின் கே.டி ராகவன் அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் பாஜக தொண்டர்கள் ஆளும் தமிழக அரசை டுவிட்டரிலும், முகநூலிலும் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அராஜகத்துக்கு ஒரு போதும் நாங்கள் துணை போக மாட்டோம் இந்த மண்ணில் ஒவ்வொரு பெண்ணின் பாதுகாப்புக்காக பாஜக போராடும் என குஷ்பு தெரிவித்துள்ளார்.