Tamil Flash News
ராகுல் காந்தி பதவி விலகுவாரா? – நடிகை கேள்வி
தோல்விக்கு பொறுப்பு ஏற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகுவாரா என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், மத்தியில் ஆட்சியில் அமர 272 இடங்கள் வேண்டும் என்கிற நிலையில் 350 தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதால் அக்கட்சி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் வெறும் 90 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் எதிர்கட்சியாக அமரும் தகுதியையும் காங்கிரஸ் இழந்துள்ளது.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் “ உத்தரபிரதேசத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராஜ் பாபர் ராஜினாமா செய்துள்ளார். ராகுல் காந்தி என்ன செய்யப் போகிறார்? கமல்நாத், கிலட், ஜோதிர் ஆதித்யா இவர்களெல்லாம் என்ன செய்யப் போகிறார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.