பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி மரணம்

41

பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி. இவர் சந்திரலேகா படத்தின் மூலம் அந்தக்கால ஜெமினி நிறுவனத்தில் குரூப் டான்ஸராக சேர்ந்தார். தொடர்ந்து 50 படங்களுக்கு மேல் நடன கலைஞராகவே பணியாற்றிய இவர், காதல் படுத்தும் பாடு, குழந்தை உள்ளம், பத்தாம் பசலி, என படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின்பு இயக்குனர் பாரதிராஜா பாக்யராஜ் இயக்கிய படங்களில் அதிகம் நடித்தார் பதினாறு வயதினிலே படத்தில் காந்திமதியுடன் சண்டை போடும் வேடத்தில் நடித்திருப்பார்.

பாக்யராஜின் சின்ன வீடு, ரஜினிகாந்த் நடித்த வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் முதுமை காரணமாக சென்னை குரோம்பேட்டையில் வசித்து வந்தார். நேற்று இவர் மாரடைப்பால் காலமானார்.

பாருங்க:  இடைத்தேர்தலில் அதிக இடங்களை பிடிக்கும் திமுக - ஆட்சி கவிழுமா?
Previous articleநயனை ஏன் கல்யாணம் பண்ணிக்கல- விக்னேஷ் சிவனின் பதில்
Next articleகணவரால் கைவிடப்பட்ட பெண்- இன்ஸ்பெக்டர் ஆனார்