பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா, இவர் விஜய் டிவியில் வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்து வந்தார். மேலும் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளிலும் கலகலப்பாக கலந்து கொள்வார். சில நாட்கள் முன் விஜய் டிவியில் நடந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர் தீனாவை அப்படியே தூக்கி சுற்றினார். மிக அதிரடியான நடிகை. இவர் டிக் டாக் வீடியோக்கள் போல் சின்ன சின்ன க்யூட் வீடியோக்களையும் அடிக்கடி வெளியிடுவார்
விளம்பரப்படங்களிலும் இவர் நடித்து வந்தார் சில நாட்கள் முன் இவரது திருமணம் நிச்சயிக்கப்பட்டது. விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது சின்னத்திரை நடிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.