நடிகர் அஜித்தே சூப்பார் ஸ்டார் – நடிகை த்ரிஷா புகழாராம்

நடிகர் அஜித்தே சூப்பார் ஸ்டார் – நடிகை த்ரிஷா புகழாராம்

Actres trisha appreciate ajith for nkp – நடிகர் அஜித் ஒரு சூப்பர் ஸ்டார் என நடிகை த்ரிஷா பாராட்டியுள்ளார்.

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து சமீபத்தில் வெளியான நேர்கொண்டபார்வை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைக்கு எதிராக குரல் கொடுப்பது போல் அஜித் நடித்துள்ளார்.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற யுனிசெப் கூட்டத்தில் நடிகை த்ரிஷா கலந்து கொண்டார். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். பாலியல் பிரச்சனைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களை பிறரால் புரிந்து கொள்ள முடியாது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு வழுவான சட்டம் தேவை. திரைப்படங்கள் என்பது கற்பனையே. அதை சிரியஸாக எடுத்துக்கொண்டு பின்பற்றக்கூடாது. அஜித் ஒரு சூப்பர் ஸ்டார். நேர்கொண்ட பார்வை மாதிரியான படத்தில் அவர் நடித்தது பாராட்டுக்குரியது’ என அவர் பேசினார்.