நடிகை சுஜா வருணிக்கு ஆண் குழந்தை – கணவர் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

214

சிவாஜியின் பேரனை திருமணம் செய்த நடிகை சுஜா வருணிக்கு ஆண் அழகிய குழந்தை பிறந்துள்ளது.

மிளகா, சத்ரு, ஆண் தேவை உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை சுஜா வருணி. இவருக்கும் சிவாஜியின் பேரன் சிவகுமாருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

அந்த நிலையில்தான் சுஜா வருணி கடந்த வரும் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்தவுடன் சிவகுமாரை கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது.

இந்நிலையில், அவர் 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபப்பட்டார். நேற்று அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியை சிவகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

பாருங்க:  என்னிடம் இருந்து எந்த அப்டேட்டும் வராது! அஜித் பட தயாரிப்பாளர் தகவல்!