பிக்பாஸ் வீட்டில் நடிகை ஷெரின் எழுதிய கடிதம் பற்றிய விபரம் தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் மகத் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். எனவே, போட்டியாளர்களை வைத்து ஏதாவது செய்ய வேண்டும் மஹத் கேட்க, விளையாட்டாக சில டாஸ்குகளை பிக்பாஸ் கொடுத்து வருகிறார்.
அதில், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒருவர் பற்றி ஷெரின் ஏதாவது எழுத வேண்டும். ஆனால், அது யாருக்கும் காட்டப்படாது என்கிற உத்தரவாதத்தின் பேரில் ஷெரின் எதையோ காதிகத்தில் எழுதினார். அவர் எழுதி முடித்த பின் ஷெரின் யாருக்கு எழுதினாங்களோ அவருக்கு கொடுக்க வச்சிட்டு போங்க என மஹத் மற்றும் யாஷிகா ஆனந்த் இருவரிடம் பிக்பாஸ் கூற ஷெரின் அதிர்ச்சி அடைந்தார். அதை காட்ட முடியாது எனக்கூறி அதை கிழித்து எறிந்தார்.
இந்நிலையில், அவர் என்ன எழுதினார் என்பது தெரியவந்துள்ளது. என் வாழ்க்கை மேக மூட்டமாக இருந்த நாட்களில் நீ சூரிய ஒளி போல வந்தாய். உன்னிடம் நான் நிறைய கூற வேண்டும்.. என் இருண்ட பக்கங்களில் ஒளியை ஏற்று’ என அவர் எழுதினார். தர்ஷனை மனதில் வைத்து ஷெரின் எழுதிய காதல் கடிதம் அது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.