rashmika

அஜித் பெயரை கூறியதும் ஆர்ப்பரித்த ரசிகர்கள் – அதிர்ச்சியான நடிகை (வீடியோ)

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த வரும் இவர் நடித்த விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை இரு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது. அதேபோல், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை ராஷ்மிகா மண்டனா. கீதா கோவிந்தம் உட்பட நடிகர் விஜய தேவரகொண்டாவுடன் இவர் செய்யும் ரொமான்ஸ் காட்சிகளுக்காகவே சில திரைப்படங்கள் அங்கு நல்ல வசூலை பெற்றது. தமிழில் இவரை நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக இவர் நடிக்கவுள்ள என்கிற செய்தியும் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு திரைப்பட விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது, தமிழ் நடிகர்களில் யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்? என தொகுப்பாளினி அவரிடம் கேட்ட கேள்வி, ராஷ்மிகா ரஜினியின் பெயரை கூறிவிட்டு அடுத்து அஜித் என கூறினார்.. அவர் அடுத்து பேசுவதற்குள் விசில் சத்தம் விண்ணை பிளந்தது. ஆனால், புரியாமல் முழித்த ராஷ்மிகாவிடம் ‘இங்கு அஜித் பேர் சொன்னாலே இப்படித்தான்’ என தொகுப்பாளினி பதில் கூறி அவரை அசர வைத்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.