தற்கொலை மிரட்டல் விடுத்த மதுமிதா – காவல் நிலையத்தில் விஜய் டிவி புகார்

246

சம்பள பாக்கியை கேட்டு நடிகை மதுமிதா தற்கொலை மிரட்டல் விடுப்பதாக விஜய் தொலைக்காட்சி நிறுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகை மதுமிதா. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்த அவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 50 நாட்களுக்கும் மேல் அங்கி இருந்த அவர் அடிக்கடி பிக்பாஸ் போட்டியாளர்களிடம் சண்டை போட்டு வந்தார்.

கடைசியாக நடந்த ஒரு சண்டையில் அவர் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். எனவே, அவர் உடனடியாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டதற்கான தன்னுடைய சம்பள பாக்கியை உடனே கொடுக்காவிடில் தற்கொலை செய்து கொள்வேன் என அவர் மிரட்டியதாக விஜய் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Biggboss season 3, Actres madhumitha, Vijay Tv, Sucide attempt, பிக்பாஸ் சீசன் 3, பிக்பாஸ் மதுமிதா, நடிகை மதுமிதா, விஜய் தொலைக்காட்சி, தற்கொலை மிரட்டல்

பாருங்க:  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த நாள் இன்று