நீண்ட வருடங்களுக்கு பின் நடிகை கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஈ.பி.கோ 302 திரைப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகை கஸ்தூரி பல வருடங்களாக முக்கிய வேடங்களில் நடிக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் கிண்டலாகவும், கேலியாகவும் கருத்து தெரிவித்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளர்.
இந்நிலையில், ஈபிகோ 302 என்கிற புதிய திரைப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சௌத் இந்தியன் புரொடெக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை ‘காத்தவராயன்’ படத்தை இயக்கிய சலங்கை துரை இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.