எனக்காக யாரும் பேசவேண்டாம் – அபிராமி வெளியிட்ட ஆவேச வீடியோ

263

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி சர்ச்சையில் சிக்கிய மதுமிதா பற்றி தான் எந்த கருத்தும் கூறவில்லை கூறவில்லை என நடிகை அபிராமி கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற நடிகை மதுமிதா சமீபத்தில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாகவும், அதனால் அவர் வெளியேற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

மேலும், தனது சம்பள பாக்கியை உடனே தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வே என மதுமிதா மிரட்டியதாக விஜய் தொலைக்காட்சி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், மதுமிதா பொய்யான விளம்பரத்தை தேடுவதாகவும், நாடகமாடுவதாகவும் அபிராமி பேட்டி கொடுத்தார் என சில முகநூல் பக்கங்களில் செய்தி வெளியானது.

ஆனால், இதை மறுத்து அபிராமி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மதுமிதா குறித்து நான் எதுவும் பேசவில்லை. அப்படி பேசுவது எனில் நான் கொடுத்த பேட்டிகளிலேயே கூறியிருப்பேன். இப்படி தேவையில்லாத பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என அதில் ஆவேசமாக கூறியுள்ளார்.

 

பாருங்க:  யாரோ போல என்னை பார்க்க... காதலில் தோற்ற கவினுக்கு சோக பாட்டு டெடிகேட்.. வைரல் வீடியோ