மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விவேக். முதல் படத்திலேயே முத்திரை நடிப்பை பதித்தார். அடுத்தடுத்து வந்த புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட படங்கள் விவேக் யாரென்பதை தமிழ் சினிமா உலகுக்கு காட்டியது. சென்னை தலைமை செயலகத்தில் வேலை பார்த்துக்கொண்டே சினிமாவில் இவர் நடித்தார்.
முன்னணி நடிகர்களான ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், அஜீத், விஜய் உள்ளிட்ட எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர் விவேக்.
இந்த நிலையில் கடந்த வருடம் 2021ல் ஏப்ரல் 17ல் விவேக் திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த நிலையில் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த விவேக்கின் மனைவி, நடிகர் விவேக்கின் பெயரை அவர் வாழ்ந்த தெருவுக்கு வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்று அவர் பெயர் வைக்கப்படும் என தெரிகிறது. இதற்கான விழா வரும் 3ம் தேதி நடைபெறும் எனவும் தெரிகிறது.