நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியை பிரிந்தது குறித்தும் விளையாட்டு வீராங்கனையான ஜூவாலா கட்டாலாவைக் காதலிப்பது குறித்தும் பேசியுள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் ஊரடங்கு காலத்தில் தனது ரசிகர்களோடு சமூகவலைதளங்களில் அதிகமாக உரையாடி வருகிறார். இந்நிலையில் அவரின் மனைவியை விவாகரத்து செய்தது மற்றும் தன்னுடைய தற்போதைய காதல் ஆகியவற்றைக் குறித்து இப்போது பேசியுள்ளார்.
தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘ ஜூவாலா கட்டாவால் தான் என் மனைவியை பிரிந்ததாக சிலர் சமூகவலைதளங்களில் கூறினார்கள். மேலும் ராட்சசன் படத்தின் போது அமலா பாலை காதலிக்கிறேன் என கூறினார்கள். ஆனால், அது வெறும் வதந்தி. என் மனைவியை பிரிந்த பிறகு தான் நான் ஜுவாலாவை சந்தித்தேன். நேர்மறை எண்ணம் கொண்ட அவரது வாழ்விலும் பிரிவை சந்தித்துள்ளார். எனவே எங்கள் இருவரது மனம் ஒத்துப்போனது நாங்கள் இருவரும் மனம்விட்டு நிறைய பேசியுள்ளோம். எங்களது உறவு நல்ல முறையில் தான் இருக்கிறது. பார்ப்போம் எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்று. என கூறியுள்ளார். விஷ்ணு விஷாலுக்கு இந்த வாழ்க்கை அவர் நினைத்த படியே சிறப்பாக அமையட்டும் வாழ்த்துக்கள்.’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர் என்ற தகவலும் பரவி வருகிறது.