cinema news
நடிகர் விக்ரமின் உதவி
கோரதாண்டவம் ஆடி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகளும் கடுமையாக முயன்று வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நபர்களிடம் இருந்து கொரோனா நிவாரண நிதியை பெற்று வருகிறது.
இதுவரை நடிகர் சிவக்குமார், ரஜினி, சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், ஷங்கர், ஏ.ஆர் முருகதாஸ், என பல சினிமா பிரபலங்கள் கொரோனா நிதியுதவியை வாரி வழங்கியுள்ளனர்.
நேற்று நடிகர் விக்ரமும் தன் பங்கு நிதியாக 30 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இதை ஆன்லைன் மூலம் வழங்கியுள்ளார்.