நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனால் பாதிக்கப்பட்ட தன்னுடைய ரசிகர்களை அறிந்து அவர்களின் வங்கிக் கணக்கில் 5000 ரூபாய் பணம் செலுத்தியுள்ளார் நடிகர் விஜய்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு அரசியல் மற்றும் திரை பிரபலங்களும் நிதியுதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் உதவி எதுவும் செய்யவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து கொரோனா நிதியுதவியாக ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அதாவது, மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையை ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அனுப்பி ஏழை மக்களுக்கு நேரடியாக உதவி செய்யவும் விஜய் கோரியுள்ளதாக தெரிகிறது.
அதோடு ஒதுங்கிக் கொள்ளாமல் நடிகர் விஜய் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடைய ரசிகர்கள் யார்யார் என்ற பட்டியலை எடுத்து அவர்களுக்கு உதவும் விதமாக தலா 5 ஆயிரம் ரூபாயை தனது விஜய் சேரிட்டபிள் ட்ரஸ்ட் மூலம் ரசிகர்களின் வங்கிக் கணக்குக்கே நேரடியாக அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சம்மந்தமாக ரசிகர்கள் தங்களுக்கு பணம் வந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்க்ரீன்ஷாட்களைப் பகிர்ந்து வருகின்றனர்.