நடிகர் விஜய்க்கு 1 லட்சம் அபராதம் விதித்த கோர்ட்

19
வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி  தடை விதிக்க நடிகர் விஜய் கோர்ட்டில் கோரிய நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் 1 லட்சம் ரூபாய் அவருக்கு அபராதம் விதித்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய் காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்தார். இந்த சொகுசு காருக்கு வணிக வரிதுறை நுழைவு வரி விதித்தது.
இதை எதிர்த்தும், வரி விதிக்க தடை கோரியும் நடிகர் விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் நிஜ வாழ்விலும் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என்றார்.  வரி செலுத்துவது நன்கொடை போன்றது அல்ல, நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு என நீதிபதி கூறினார்.
 சமூக நீதிக்கு பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்த நீதிபதி, நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஒரு லட்சம் அபராத தொகையை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
பாருங்க:  ஜூன் மாதத்தில் உச்சத்தைத் தொடும் கொரோனா பாதிப்பு! இந்தியாவுக்கு அதிர்ச்சி!
Previous articleசார்பட்டா பரம்பரை டிரெய்லர் வெளியானது
Next articleஆனைகட்டி அருகே யானைக்கு ஆந்த்ராக்ஸ்