கலங்க வைக்கும் நடிகர் தவசியின் மரணம்

கலங்க வைக்கும் நடிகர் தவசியின் மரணம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வந்த கருப்பன் குசும்பன் காமெடி மூலம் அறிமுகமானவர் தவசி. இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். திண்டுக்கல் அருகே இவர் சொந்த ஊர் உள்ளது.

கிழக்கு சீமையிலே தொடங்கி 146 தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். இவருக்கு கொரோனா காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது புற்றுநோயால் இவர் பாதிக்கப்பட்டார். ரஜினி நடித்த அண்ணாத்தே படத்தில் நடித்த இவருக்கு அதுவே கடைசி படமாகவும் போய்விட்டது.

மதுரை வேலம்மாள் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற இவருக்கு எந்த பலனும் கிடைக்காத நிலையில் சினிமா நடிகரும் மருத்துவருமான டாக்டர் சரவணன் மருத்துவமனையில் இவருக்கு தேவையான சிகிச்சைகள் செய்யப்பட்டது.

உடலே மாறிப்போய் உருக்குழைந்து இவர் காணப்பட்டார். பல பிரபலங்கள் இவருக்கு பண உதவி செய்தனர்.

விஜய் சேதுபதி,சிம்பு, சூரி, சிவகார்த்திகேயன், ரோஃபோ சங்கர், நாடக நடிகர் ராதாகிருஷ்ணன் என பலரும் பண உதவி செய்த நிலையில் எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் நேற்று இரவு நடிகர் தவசி மரணமடைந்தார்.

இன்று அவரது சொந்த ஊரில் அவரது இறுதிச்சடங்குகள் நடக்கிறது.