இயக்குனர் நடிகர் சிங்கம்புலியின் பிறந்த நாள் இன்று

15

தமிழ் சினிமாவின் சிறப்பான ஒரு முத்திரை பதித்த காமெடி நடிகர்களில் சிங்கம்புலியும் ஒருவர். பார்த்த உடனே சிரிப்பு வந்து விடும் உடல்மொழியை கொண்டவர் சிங்கம்புலி.

மாயாண்டி குடும்பத்தார் படத்தில் லூஸ் போல நடித்தார், வா திண்டுக்கல்லு, சின்னாளப்பட்டி என கூவி அழைக்கும் டிரைவராக முத்துக்கு முத்தாக படத்தில் நடித்தார்.

வெள்ளக்கார துரை படத்தில் ஒன்ஸ்மோர் காமெடியை எல்லாம் மறக்க முடியாது. இவர் நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளர். சுந்தர் சியிடம் உதவியாளராக பணியாற்றிய இவர் உனக்காக எல்லாம் உனக்காக படத்துக்கு முழு கதை வசனம் எழுதியுள்ளார் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. அஜீத் நடித்த உன்னைத்தேடி படத்தின் ஒன்லைன் இவரது கதைதான்.

அஜீத் நடித்த ரெட் படத்தை ராம்சத்யா என்ற பெயரில் இயக்கினார். இயக்குனர் பாலா தயாரித்த பேரழகன் படத்தை சிங்கம்புலி என்ற பெயரிலேயே இயக்கினார். பிதாமகன் படத்தின் காமெடி ஸ்க்ரிப்ட் எல்லாம் இவர் எழுதியதுதான்.

இப்படி பல்வேறு பரிமாணங்களை கொண்ட சிங்கம்புலியின் பிறந்த நாள் இன்று.

பாருங்க:  நடிகை கவிதா வீட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த துயரம்
Previous articleமுன்னாள் அமைச்சர் ரங்கராஜன் குமாரங்கலம் மனைவி படுகொலை
Next articleவில்லேஜ் குக்கிங் சேனலுக்கு ராகுல் காந்தி வாழ்த்து