cinema news
படப்பிடிப்பில் நடிகர் சேரன் காயம்
தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா படம் மூலம் அறிமுகமான சேரன் தற்போது இயக்குநராகவும், நடிகராகவும் திகழ்கிறார். சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து “ஆனந்தம் விளையாடும் வீடு” என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
அண்மையில் திண்டுக்கல்லில் நடந்த படிப்பிடிப்பின்போது, கால் இடறி கீழே விழுந்துள்ளார் சேரன். இதனால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. சேரன் தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கேற்ற சேரன், தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துவிட்டதாகவும், சேரன் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பிவிட்டதாகவும் தெரிகிறது.