உன்னால தர்ஷன் வெளிய போகல.. ஆனா உன்னாலதான் போனான் – வனிதாவை கலாய்த்த நடிகர் சதீஷ்

194
satish

பிக்பாஸ் வீட்டிற்கு வந்து நேற்று களோபரத்தை உருவாக்கிய நடிகை வனிதா விஜயகுமாரை தமிழ் பட நகைச்சுவை நடிகர் சதீஷ் கிண்டலடித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் எப்போதும் அடாவடியாக மற்றவரை பேச விடாமல் தன் கருத்தை தெரிவிப்பதிலேயே குறியாக இருந்தவர் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் வீட்டில் இருந்த போது தர்ஷன் வெளியேறினால் அதற்கு நீதான் காரணம் என ஷெரினிடம் சண்டை போட்டார். ஆனால், அவர் கூறியது போலவே தர்ஷன் வெளியேறிவிட்டார்.

இந்நிலையில், சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற வனிதா இந்த விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்து ஷெரினை டார்கெட் செய்தார். இதில், ஷெரின் கதறி அழும் நிலைக்கு ஆளானார்.

இதைத் தொடர்ந்து நடிகர் சதீஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நீ பன்னது தப்புன்னு நான் சொல்லல. ஆனா நீ பன்னது தப்பு. உன்னால தர்ஷன் வெளிய போகல. ஆனா சத்தியமா உன்னாலதான் வெளிய போனான். எல்லாரும் அவங்க கருத்த சொல்லுங்க.. ஆனா, நான் யாரையும் பேச விட மாட்டேன்’ என டிவிட் செய்திருந்தார்.

அவர் வனிதா விஜயகுமாரைத்தான் கூறுகிறார் என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து அவர்களும் வனிதாவை கிண்டலடித்து பதிவுகளை போட்டு வருகின்றனர்.

பாருங்க:  டி 20 உலகக்கோப்பை தொடர் நடக்க இதுதான் வழி ! முன்னாள் வீரர் சூப்பர் ஐடியா!