நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு திருமணம் நிச்சயயிக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனோடு எதிர்நீச்சல், ரெமோ, மான் கராத்தே மற்றும் பல திரைப்படங்களில் நடித்தவர் சதீஷ். இவர் திருமணம் நிச்சயக்கப்பட்டு விட்டதாக இன்று காலையிலிருந்து செய்திகள் பரவியது. அவர் மணப்பெண் மற்றும் உறவினர்களுடன் நிற்கும் புகைப்படங்களும் வெளியானது.
இந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது எனவும், மணப்பெண் சினிமா துறையை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி சதீஷ் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் அறிவிக்கவில்லை.