சந்தானம் 3 வேடங்களில் நடிக்கும் ‘டிக்கிலோனா’ – வைரல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சந்தானம் 3 வேடங்களில் நடிக்கும் ‘டிக்கிலோனா’ – வைரல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் டிக்கிலோனா திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

கடந்த பல வருடங்களாக நகைச்சுவை நடிகராக பல திரைப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகர் சந்தானம். சில வருடங்களுக்கு முன்பு நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என முடிவெடுத்தார்.

ஆனால், அவர் ஹீரோயிசம் காட்டிய திரைப்படங்கள் வெற்றியை பெறவில்லை. ஆனால், காமெடி கலந்த திரைப்படங்களான தில்லுக்கு திட்டு, ஏ1 திரைப்படங்கள் வெற்றியை பெற்றது. எனவே அதுதான் தனக்கு சரியான ரூட் என்பதை புரிந்து கொண்ட அவர் தற்போது அதுபோன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து இளம் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கும் ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தில் வில்லன், காமெடியன், வில்லன் என 3 வேடங்களில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.