உலகம் முழுவதும் கொரோனாவின் கோர பாதிப்பு தாண்டவமாடுகிறது. இது சில மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் நிலையில் பெரும் நகரங்களில் இந்த தொற்றை அவ்வளவு சீக்கிரம் கட்டுப்படுத்த முடியவில்லை.
வடமாநிலங்களில் குஜராத், மத்தியப்பிரதேசம், டெல்லி, மும்பை, உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை.
சென்னையிலும் சில இடங்களில் கொரோனா தொடர்ந்து இருந்து வருகிறது. இருப்பினும் பெரிய அபாயங்களை கடந்து விட்ட நிலையில் கொரோனா அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும் அவர் கேளம்பாக்கத்தில் உள்ள தன் பண்ணை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் பயப்படும்படியாக ஒன்றும் இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.