Entertainment
நடிகர் ரகுமான் மகள் திருமணம்
நிலவே மலரே படத்தின் மூலம் அறிமுகமாகி வசந்தராகம், புதுப்புது அர்த்தங்கள், கண்ணே கனியமுதே, துருவங்கள் 16, ராம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ரகுமான் இவரின் மகள் ருஷ்டா ரஹ்மான் – அல்தாப் நவாப் ஆகியோரது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இவரது உறவினர் ஆவார் அவரும் விழாவில் கலந்து கொண்டார்.
இதில் முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மேலும் மணமக்களுக்கு பசுமைக்கூடைகளை வழங்கி வாழ்த்தினார்.
சென்னையில் நடைபெற்ற திரைப்பட நடிகர் திரு. ரஹ்மான் அவர்களின் மகள் ருஷ்டா ரஹ்மான் – அல்தாப் நவாப் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு பசுமைக்கூடை மரக்கன்றுகளை வழங்கி வாழ்த்தினார். pic.twitter.com/8fZEpF5gPD
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 9, 2021
