தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் இன்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். அதன்பின் விஷால் நடித்த மருது திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். ஹரஹர மஹாதேவிக்கி திரைப்படத்தில் காமெடி வேடத்திலும் நடித்திருந்தார்.
இதுபோக தர்மதுரை, சலீம் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். மேலும், பல வினியோகஸ்தராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், இன்று அவர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.