நல்ல உணவை சாப்பிடமுடியவில்லை! பாலைவனத்தில் சிக்கிய நடிகர் புலம்பல்!

நல்ல உணவை சாப்பிடமுடியவில்லை! பாலைவனத்தில் சிக்கிய நடிகர் புலம்பல்!

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாக்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகரான பிருத்விராஜ் கொரோனா பாதிப்புக் காரணமாக ஜோர்டான் நாட்டின் பாலைவனத்தில் சிக்கிக் கொண்டுள்ளார்.

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள பிருத்விராஜ் ஆடுஜீவிதம் எனும் படத்தின் படப்பிடிப்புக்காக 58 பேர் கொண்ட குழுவினரோடு ஜோர்டான் நாட்டில் உள்ள ஒரு பாலைவனத்தில் முகாமிட்டு இருந்தனர் படக்குழுழ்வினர். இந்நிலையில் கொரோனா பரவலால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு விமானங்கள் முடக்கப்பட்டதால் படக்குழுவினர் அனைவரும் அந்த நாட்டில் இருந்து இந்தியா திரும்ப முடியாத சூழலுக்கு ஆளானார்கள். அவர்களை இப்போது அங்கிருந்து மீட்டு வர முடியாது என கேரள அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு தனது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிருத்விராஜ் ‘கடந்த வருடம் புத்தாண்டு தினத்தில் குடும்பத்தாருடன் ருசியான மதிய உணவை சாப்பிட்டேன். ஆனால் இந்த ஆண்டு அந்த வாய்ப்பு இல்லாமல்,பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உறவுகளை பிரிந்து வாடுகிறேன். விரைவில் எல்லாம் முடிந்து ஒன்று சேரும் காலம் வரும்.’ எனத் தெரிவித்துள்ளார்.