படுதோல்வி அடைந்த பிரகாஷ்ராஜ் – ரசிகர்கள் அதிர்ச்சி

238

கர்நாடகாவில் பெங்களூரில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் படுதோல்வி அடைந்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே நடிகர் பிரகாஷ்ராஜ் பிரதமர் மோடி மற்றும் பாஜகவிற்கு எதிராக கருத்துகளை தனது டிவிட்டர் பக்கத்திலும், பேட்டிகளிலும் தொடர்ந்து கூறி வருகிறார்.

மேலும், மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் மத்திய தொகுதியில் அவர் சுயேட்சையாக போட்டியிட்டார். தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் பிரகாஷ்ராஜ் வெறும் 30 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார். அந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரகாஷ்ராஜை விட 2 லட்சம் வாக்குகள் அதிகம் வாங்கி மகத்தான வெற்றி பெற்றார். இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரகாஷ்ராஜ் ‘என் கன்னத்தில் யாரோ பலமாக அடித்தது போல் இருக்கிறது. என்னை சீண்டி பல கருத்துகள் வருகிறது. ஆனாலும் நான் என் கருத்தில் உறுதியாக நிற்பேன். பாதுகாப்பான இந்தியாவிற்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். என் முன்னால் ஒரு கடினமான பாதை துவங்கியுள்ளது. இந்த பயணத்தில் என்னுடன் பயணித்த எல்லோருக்கும் நன்றி. ஜெய் ஹிந்த்” என குறிப்பிட்டுள்ளார்.

பாருங்க:  இயக்குனர் மிஷ்கின் பிறந்த நாள்- இயக்குனர் ஷங்கர் மணிரத்னம் கலந்து கொண்டனர்