பார்த்திபன் கொடுத்த அசத்தல் பதிலடி – டிவிட்டரில் இருந்து ஓடிய ரஜினி ரசிகர்

290

மரியாதை இல்லாமல் பேசிய ரஜினி ரசிகருக்கு நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கொடுத்த பதிலடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதையும் வித்தியாசமாக யோசிக்கும், வித்தியாசமாக செய்யும் இயக்குனர் பார்த்திபன் சமூக வலைதளமான ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். தற்போது அவர் இயக்கி முடித்துள்ள ஒத்த செருப்பு திரைப்படம் தொடர்பான பல தகவல்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

நேற்று ஒரு ரஜினி ரசிகர் ‘டேய் அசுரன் டிரைலர் பாத்தியாடா?’ என ஒருமையில் அநாகரிகமாக பார்த்திபனிடம் கேள்வி கேட்டிருந்தார். இதைக்கண்டு கோபப்படாத பார்த்திபன் பொறுமையாக, நிதானமாக பதிலளித்தார். இதையடுத்து அந்த ரஜினி ரசிகருக்கு கண்டனங்கள் குவிந்தது. எனவே அந்த ரஜினி ரசிகர் தனது ட்விட்டர் கணக்கை அழித்துவிட்டு டுவிட்டரில் இருந்து ஓடிவிட்டார்.

சரியான பதிலடி கொடுத்த பார்த்திபனை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். பார்த்திபன் என்ன பதில் சொன்னர்.. கீழே டிவிட் பாருங்க…

 

பாருங்க:  வெப்பநிலை 5 முதல் 9 டிகிரி வரை உயரும் - சென்னை வானிலை மையம்