தமிழில் விஜய் நடித்த யூத் படத்தில் முதன் முதலில் சின்ன ரோலில் நடித்தவர் நட்ராஜ். முதன் முதலில் நாளை, சக்கர வியூகம், மிளகா படங்களில் மூலம் ரசிகர்களுக்கு ஓரளவு தெரிய ஆரம்பித்தார்.
சதுரங்க வேட்டை படத்தின் மூலம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஹீரோவானார். இவர் ஹிந்தி சினிமாக்களில் பெரிய ஒளிப்பதிவாளரும் கூட. தமிழிலும் நடிகர் விஜய் நடித்த புலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பலை இருந்து வருகிறது. இது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நட்ராஜிடம் மீடியாக்காரர்கள் கேள்வி கேட்டிருந்தார்களொ என்னவோ அவரின் பதில் மிக காட்டமாக இருந்தது அவரின் பதில் இதுதான்,எந்த நடிகர் எந்த படத்தில் நடித்தால் எனக்கு என்னங்க.. எங்கிட்ட ஏன் கேள்வி கேக்குறீங்க.. அவர் கிட்ட கேளுங்க… அவர் இஷ்டம் என் கிட்ட பதில் இல்லைங்க….என கூறியுள்ளார்