பிரபல குணச்சித்திர நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம்…

0
56
krishamoorthy

பிரபல குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் இன்று காலமானார்.

நடிகர் வடிவேலு நடித்த பல காமெடி திரைப்படங்களில் அவருடன் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் கிருஷ்ணமூர்த்தி. மேலும், நான் கடவுள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் அவர் நடித்துள்ளார்.

அவர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு, தேனி மாவட்டம் குமுளி என்ற இடத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது மரணமடைந்தார். அவருக்கு திரையுலகின் பலரும் இரங்கலும், அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.