இவ்ளோ பண்ணிட்டு இங்க இருக்க முடியாது – வெளியேறும் கவின்…(வீடியோ)

227

பிக்பாஸ் வீட்டிலிருந்து நடிகர் கவின் வெளியேற நினைக்கும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களையும் தாண்டி பரபரப்புடன் போய்க்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடினமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. பினாலே டாஸ்க் மூலம் முகேன் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். சமீபத்தில் சேரன் வெளியேறினார். எனவே, கவின், லாஸ்லியா, ஷெரின், தர்ஷன், சாண்டி ஆகிய 5 பேரில் முகேனுடன் மோதப்போகிறார் யார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரூ. 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேற விரும்பினால் ஒருவர் வெளியேறலாம் என்கிற வாய்ப்பை நேற்று பிக்பாஸ் கூறினார். அனைவரும் அமைதியாக இருக்க கவின் எழுந்து நான் வெளியேறுகிறேன் எனக்கூறினார். இதைக்கண்டு லாஸ்லியாவும், சேண்டியும் அதிர்ச்சி அடைவதோடு நேற்று நிகழ்ச்சி முடிந்துவிட்டது.

இந்நிலையில், இன்று காலை வெளியான புரமோ வீடியோவில் தான் ஏன் வெளியேற முடிவெடுத்தேன் என சாண்டியிடம், கவின் விளக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

 

பாருங்க:  ஐயப்பன் கோவில் மண்டல பூஜை சீசன் துவக்கம்