cinema news
நடிகர் கார்த்திக்குக்கு காலில் எலும்பு முறிவு
அலைகள் ஓய்வதில்லை , வருஷம் 16, பொன்னுமணி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கார்த்திக். இவரது மகன் கெளதம் கார்த்திக் படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக்கின் அப்பா முத்துராமன் காலம் தொட்டு 3 தலைமுறையாக இவர்கள் குடும்பம் சினிமாவில் நடித்து வருகிறது.
உடற்பயிற்சி செய்தபோது தவறி விழுந்து நடிகர் கார்த்திக் காலில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
ஸ்கேன் செய்ததில் அவருக்கு எலும்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.