நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஊடக நண்பர்களைப் பாராட்டியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்த்து வருகிறார்கள் ஊடகவியலாளர்கள். இந்நிலையில் அவர்களுக்குத் தனது பாராட்டைத் தெரிவித்து தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்
அவரது டிவிட்டர் பதிவில் ‘ஊரடங்கு நேரத்தின் போதும், உண்மைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க உழைக்கும் அத்தனை ஊடகத்துறை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வதந்திகள் பரவிடாமலும், சரியானதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் உங்கள் பணி மகத்தானது. உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.