நடிகர் ஜெய்சங்கரின் வெளிவராத பக்கங்கள் கொண்ட வாழ்க்கை வரலாற்று புத்தகம்

19

60 மற்றும் எழுபதுகளில் தமிழ் சினிமா உலகை கலக்கியவர் நடிகர் ஜெய்சங்கர். 70களில் இவர் நடித்த படங்கள் எல்லாம் சிஐடி டைப் படங்கள். பல படங்களில் துப்பறியும் வேடத்தில் நடித்திருப்பார்.இல்லேனா போலீஸ் வேடத்தில் நடித்திருப்பார் பல முரட்டுத்தனமான ஆக்சன் படங்களில் இவர் அந்தக்காலங்களில் நடித்திருக்கிறார்.

60மற்றும் 70களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜெய்சங்கர் படங்கள் ரிலீஸ் ஆகாத நாளே இல்லை.

80களிலும் 90களிலும் பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். ரஜினி , கமலுக்கு வில்லனாக துடிக்கும் கரங்கள், முரட்டுக்காளை, காதல் பரிசு உட்பட படங்களிலும் நடித்துள்ளார்.

சினிமா தவிர்த்து அவர் உண்மையில் மிக நல்ல மனிதர் எந்த நேரமும் யாருக்காவது உதவி செய்து கொண்டே இருப்பார் என்பது திரையுலகத்தினர் பலரும் ஜெய்சங்கரை பற்றி சிலாகித்து கூறும் விசயமாகும்.

ஜெய்சங்கரின் மகன் விஜய் கூட ஒரு பெரிய கண் ஆஸ்பத்திரி வைத்து நடத்தி வருகிறார். அவரும் பல சேவைகளை இலவசமாக செய்து வருகிறார்.

ஜெய்சங்கரின் வாழ்க்கை வரலாற்றை வித்தியாசமாக தொகுத்து இனியவன் என்பவர் திரையுலக கர்ணன் ஜெய்சங்கர் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் ஜெய்சங்கரை பற்றி அறியாத பல விசயங்கள் இப்புத்தகத்தில் உள்ளனவாம்.

ஜெய்சங்கர் ரசிகர்கள் பழைய சினிமா விரும்பிகள் இப்புத்தகத்தை முயற்சி செய்யலாம்.

 

பாருங்க:  விஜயகாந்தை சந்தித்த ரஜினிகாந்த் - காரணம் என்ன?