Latest News
நடிகை கடத்தல் வழக்கில் ஐ போனை மறைத்ததாக திலீப் மீது குற்றச்சாட்டு
பிரபல மலையாள நடிகர் திலீப் இவர் கடந்த 2017ல் ஒரு முன்னணி நடிகையை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இவர் மீது வழக்கு உள்ளது.
இதனை தொடர்ந்து அவர் ஜாமீனில் இருந்த அவர் விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் திலீப் கேரள நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவின்பேரில் தனது 3 செல்போன்களையும், உறவினர்களின் 3 செல்போன்களையும் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைத்தார்.
செல்போன்களை ஆய்வு செய்ய தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு திலீப் தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 6 செல்போன்களையும் அலுவா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒப்படைக்கும்படியும், போலீசார் செல்போனை ஒப்படைக்க கேட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யலாம் என்றும் உத்தரவிட்டார்.
இதையடுத்து 6 செல்போன்களும் அலுவா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிலையில் திலீப் சில மாதங்களாக பயன்படுத்திய ஐபோனை கோர்ட்டில் ஒப்படைக்காமல் மறைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. ஆனால் தன்னிடம் ஐபோன் இல்லை என்று திலீப் மறுத்துள்ளார்.
