பிரபல நடிகர் ஒருவரை கைது செய்ய உதவினால் 1 லட்சம் பரிசு என அரசு அறிவித்துள்ளது. இங்கு அல்ல பஞ்சாப்பில் தான் இப்படியொரு அறிவிப்பு. பஞ்சாப்பின் பிரபல நடிகர் தீப் சித்து.
இவர்தான் விவசாயிகளின் போராட்டத்தை தீவிரப்படுத்தி வலுப்படுத்தியதாக கூறப்படுகிறது.
குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் நடந்த வன்முறையை ஒட்டி பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
தர்மேந்தர் சிங் ஹார்மன் என்ற நபர்தான் செங்கோட்டையில் தேசிய கொடியை எறிந்து விட்டு சீக்கியர் கொடியை பறக்க விட்ட நபர் அவரை கைது செய்துள்ள டெல்லி போலீஸ் நடிகர் தீப் சித்துவை கைது செய்ய உதவி செய்பவர்களுக்கு 1 லட்சம் பரிசு என அறிவித்துள்ளது.