உலகெங்கும் கொரோனாவின் மூன்றாவது அலையான ஓமிக்ரான் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் கொரோனாவின் மூன்றாவது அலையால் ஆங்காங்கே சிலருக்கு கோவிட் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.
முக்கிய தலைவர்கள், நடிகர்கள், திரைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
நடிகர் சிரஞ்சீவிக்கும் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இருந்தபோதிலும், நேற்றிரவு லேசான அறிகுறிகளுடன் கோவிட் 19 பாசிட்டிவ் பரிசோதனை செய்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என சிரஞ்சீவி கூறியுள்ளார்.