cinema news
இயல் இசை நாடக மன்ற தலைவராக நடிகர் சந்திரசேகர்
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சந்திரசேகரை புதிய தலைவராக நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வரும் வாகை சந்திரசேகர் 300க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்துள்ளார்.
80 மற்றும் 90களில் இவர் பிரபலமான நடிகராவார். கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான நண்பா நண்பா என்கிற திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் 1993 ஆம் ஆண்டு கலைமாமணி விருதையும் பெற்றவர்.
கடந்த சில மாதங்கள் முன்பு வரை வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ ஆக இருந்தவர் இவர். தற்போது பதவியில் உள்ள இசையமைப்பாளர் தேவாவின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி தற்போது வாகை சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.