பிரபல தமிழ் நடிகர் சக்கரவர்த்தி திடீர் மரணம்

பிரபல தமிழ் நடிகர் சக்கரவர்த்தி திடீர் மரணம்

தமிழில் 80களில் வந்த பல படங்களில் நடித்தவர் சக்கரவர்த்தி. இவர் இல்லாமல் படம் இருக்காது. பெரும்பாலான படங்களில் சிறு வேடம் ஏதாவது ஏற்று நடித்திருப்பார்.

முள் இல்லாத ரோஜா, உதயகீதம், ரிஷிமூலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த ராஜாதி ராஜா படத்திலும் நடித்துள்ளார்.

நீண்ட நாட்களாக நடிக்காமல் இருந்து வந்த இவர் முகநூலில் நல்ல ஆக்டிவாக இருப்பார். சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் பின்னணி குரல் கொடுத்து வந்தார்.

இன்று திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சக்கரவர்த்தி இன்று மாரடைப்பால் காலமானார்.

தைப்பொங்கல் படத்தில் தீர்த்தகரையினிலே என்று இவர் தோன்றி நடித்த பாடலை மறக்க முடியாது, அதே போல் ரிஷிமூலம் படத்திலும் இவரின் நடிப்பு மறக்க முடியாதது.