லைக் குவிக்கும் பாலகிருஷ்ணாவின் புது லுக் – கே.எஸ்.ரவிக்குமார் புதிய பட அப்டேட்

லைக் குவிக்கும் பாலகிருஷ்ணாவின் புது லுக் – கே.எஸ்.ரவிக்குமார் புதிய பட அப்டேட்

கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கும் புதிய படத்தில் அவரின் தோற்றம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலகிருஷ்ணன். மறைந்த நடிகர் மற்றும் ஆந்திராவின் முதல்வருமான என்.டி.ராமாராவின் மகனான இவருக்கென தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

இவர் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு புதிய தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தொடர்பான பாலகிருஷ்ணாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில், அவர் செம மாஸாக ஸ்டைலாக இருக்கிறார். இப்படத்தை பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.