காமெடி நடிகர் பாலாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்

காமெடி நடிகர் பாலாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்

திருடன் போலீஸ், குட்டிப்புலி உள்ளிட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் காமெடி நடிகர் பாலா என்ற பாலசரவணன் இவர் குட்டிப்புலி படத்தில் பேசிய எப்படித்தான் இந்த சல்லிப்பயல்களை லவ் பண்றாளுகன்னு தெரியல என்ற டயலாக் ரொம்ப பேமஸ்.

காமெடியில் மதுரை ஸ்லாங்கில் அசத்தும் இவரின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் சோழவந்தான் ஆகும்

இவர் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்து விட்டார். சமீபத்தில் சிம்புவுடன் இணைந்து சுசீந்திரன் இயக்கி வரும் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஈஸ்வரன் படப்பிடிப்பில் நடந்தது நடிகர் சிம்பு உட்பட பலர் கலந்து கொண்டனர்